தென் இந்தியாவின் மிகச்சிறந்த நிலக்கடலை உடைக்கும் இயந்திரம் தயாரிப்பாளர் நடுப்பாளையம் பெட்டி
எங்களது நிலகடலை உடைக்கும் இயந்திரங்களின் படமும் விபரமும் இந்த இணையதளத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். ஆர்டர் கொடுத்தவுடன் 15 நாட்களில் சப்ளை செய்கிறோம்.
எங்களது பெட்டியில் பருப்புகள் உடையாது . உமியில் பருப்பு போகாது . உமி புடைக்க தேவை இல்லை . விதைக்கு உடைப்பதற்கும், மிட்டாய் பருப்பு தயார் செய்வதற்கும், வியாபரத்திற்கு உடைப்பதற்கும் சிறந்த இயந்திரம் பட்டாணி, கொடிக்காய், பீ.நெட் , ஜே.எல், வீ.ஆர், 2, 6, குஜராத் ஜே.எல், போன்ற காயாக இருந்தாலும் காயின் உருகுவதற்குத் தகுந்தவாறு 5 நிமிடத்தில் ஜல்லடைகளை மாற்றி காய் உடைக்க வசதியாக செய்யப்பட்டுள்ளது. இதனால் பருப்பு உடைந்து போகாமல் கையால் உடைப்பது போல் சுத்தமாக எங்கள் இயந்திரத்தில் வரும். ஒவ்வொரு பெட்டிக்கும் மூன்று விதமான ஜல்லடைகளுடன் (மொத்தம் மூன்று ஜல்லடைகள்) சப்ளை செய்கிறோம்.காயின் பதத்திற்கு தகுந்தவாறு ஃபேன் காற்றை குறைக்கவும் கூட்டவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொட்டில் பருப்பு 1 % கூட போகாது ஒரு மூட்டை நிலக்கடலையை கையால் உரிதால் என்ன கிலோ பருப்பு வருமோ அதே எடை எங்கள் இயந்திரத்தில் அடிக்கும் போதும் பருப்பு கிடைக்கும்.
விதைககு உடைக்கும் பருப்புகளை வத்தல், திடம் பருப்பு, வத்தல்காய் இவைகளை சலித்து பிரிக்கும் தேவைப்பட்டால் பெட்டியுடன் இணைத்து சப்பளை செய்கிறோம்.
சலிக்கும் சேக்கரின் விலை தனி. இந்த இயந்திரங்கள் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டது. மரம் கிடையாது.
மேலும் எங்களிடம் நிலக்கடலை உடைக்கும் பெட்டிக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களும் எல்லா விதமான ஜல்லடைகளும் கிடைக்கும்.
எங்களது இயந்திரங்கள் யாவும் எங்கள் குடோன் டெலிவரி , புள்ளிகள், மோட்டார் நீங்கலாக சப்ளை செய்கிறோம். *வரிகள் தனி